தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் சில ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடையை சாராத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்குவதில்லை எனவும் மாதத்தின் கடைசி நாளில் மட்டுமே பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. எனவே ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் குறித்து கண்காணித்து பொருட்கள் தடை இன்றி வழங்குவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பொருட்கள் வழங்காமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.