தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய வழிவகை செய்யப்படும்.
இந்த விற்பனையை தடை செய்வதற்காக மற்ற அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தடை செய்வதற்காக “சிறப்பு கவனம் திட்டம்” வழி வகை செய்யப்படும். தற்கொலை மரணங்களை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.