உணவுப்பண்டங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமையல் மாஸ்டர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையை 10-12 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் ஏப்., 1 முதல் விலை உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.