தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் மாற்ற தேவையான தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை யு.ஜி.சி செயலர் பி.கே தாகூர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளார். அதாவது அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் குறித்து அகில இந்திய அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையின்படி ஒட்டு மொத்த கல்வி அமைப்பின் தரத்தை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக உரிய உயர் கல்வி நிறுவனங்களிடம் சில தகவல்கள் கேட்கப்பட்டது. இதற்கான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் அரசு அறிவித்திருந்தது. இந்த தகவல்களை மொத்தமுள்ள 1057 பல்கலைக்கழகங்களில் 427 பல்கலைக்கழகங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து 12,394 கல்லூரிகளில் இந்த விவரங்களை தாக்கல் செய்யாமல் இருக்கிறது. இந்த தகவல்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்புகான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது.