தமிழக சட்டப்பேரவை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையில் மே 7 மற்றும் மே 9 முதல்வர் ஸ்டாலின் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அன்று தான் தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுகிறது. அந்நாளிலேயே முதல்வரின் துறை மீதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.