Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்… மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை… வெளியான அறிவிப்பு ..!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதம் 23-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் பல கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று ஐந்து  மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அராரோ  அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. மே மாதம் 24ஆம் தேதி ஆட்சி காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் 88 ஆயிரத்து 986 வாக்கு பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலை விட 34.73 சதவீதம் அதிகமாகும். வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் தரைதளத்தில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மே 2ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |