தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வங்க கடலின் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன்கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.