தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு சிறப்பாக செய்து வருகிறது. புதிய புதிய திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை படி அமைச்சர் சுப்பிரமணியன் ஸ்டாலின் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
இதில் சர்க்கரை, சிறுநீர், இதய பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சிறுநீரகம், கல்லீரல், மஞ்சள் காமாலை, வயிறு அல்ட்ரா சவுண்ட், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்,எலும்பின் உறுதித் தன்மை உள்ளிட்ட பரிசோதனைகள் பெறும் ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் செய்யப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைகளுக்கு மக்கள் கூடுதல் செலவு செய்வதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெறும் ஆயிரம் ரூபாயில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.