தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதையடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இனி ஏழைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று ஓமலூரில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அத்தனை உதவிகளையும் அரசு செய்கிறது. நிலமற்ற ஏழைகளுக்கு கான்க்ரீட் வீடு கட்டித் தரப்படும். எந்த நிலத்தையும் எடுக்காமல் சந்தை விலைக்கு வாங்கி சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் ஏழை, ஜாதி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.