தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் மதிவாணன் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை கடலோர காவல்படை எஸ்பி செந்தில்குமார் தமிழ்நாடு கமாண்டோ படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.