தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 11 பேருக்கும் ஒமைக்ரான் உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 28ம் தேதி கணக்கு படி தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 45. இதில் சென்னையில் 35 பேருக்கும், திருவண்ணாமலையில் 3 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், சேலம், கன்னியாகுமரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.