தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில்
ஒமைக்ரான் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செல்லுதல் ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் இதை பொதுமக்கள் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. எனவே தமிழகத்தில் ஒமைக்ரான் மேலும் பரவுவதை தடுக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.