Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்….. எதற்கெல்லாம் தடை….?  அரசின் புதிய திட்டம்….!!!

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியா  நாட்டிலிருந்து தமிழகம் வந்த 47 வயது ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவும் ஒமைக்ரான் தொற்றாக இருக்குமோ என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த படுமா ?என்ற கேள்வி எழுந்துள்ளது .

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். புத்தாண்டின் போது மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டின் போது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களிலும், பார் போன்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 25ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒமைக்ரான் தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |