Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு…? சுகாதாரத்துறை சொன்ன தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமிக்கிரான் பாதிப்பு இல்லை. இந்த புதிய வைரஸை கண்டு மக்கள் பதட்டமடைய வேண்டாம். உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |