தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் .
மேலும் தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .