Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தம்….!! காரணம் என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியதாவது,”கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் வருகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், தமிழகத்தில் ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டது.

டெல்டாவும், ஒமைக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால், வீடுகளிலேயே தனிமைபடுத்திக் கொள்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதில் அடுத்தவாரம் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு போதும். ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Categories

Tech |