கோயம்பேட்டிலுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பாக புதியதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் 30% -40% காலியிடங்கள் இருக்கிறது. ஆகவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம்.
இதனிடையில் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல்வேறு பணிகள் தாமதமாகி வருகிறது. அதனை தொடர்ந்து இன்று 25 பணியாளர்கள் புதியதாக நியமித்துள்ளதாகவும் அவர்கள் 4 மாதம் காலம் டெல்லி, குஜராத் போன்ற இடங்களுக்கு சென்று பயிற்சியினை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம்கூட இருக்கக்கூடாது. அதுவே எங்களது நோக்கம் ஆகும். அதற்குரிய பணிகளை செய்து வருகிறோம் என்று பேசினார்.