Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது…. அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் என்ற கிராமத்தில் மலைப்பகுதி கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி, மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி வனத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நடு வட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர்,மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. கட்டப்படும் ரிசார்ட்க்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்க வும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |