Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 10,941….. விடாது துரத்தும் கொரோனா…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 10,941 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இன்று (ஏப்ரல் 20) அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய்  200 அபதாரம் விதிக்கப்படும்  என்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூபாய் 500 அபதாரம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |