Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு…. இலவச மின் இணைப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் உட்பட புதிய மின் வழித்தடங்கள் பயன்படுத்த தமிழக மின் வாரியம் 43,500 டிரான்ஸ் பார்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. விவசாய பிரிவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக புதிய மின் வழித்தடங்கள் அமைப்பதற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்பங்கள், 50 ஆயிரத்திற்கும் அதிகமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படுகிறது.

இணையத்தள டெண்டர் வாயிலாக, டிரான்ஸ்பார்ம் உள்ளிட்ட உபகரணங்களை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. டிரான்ஸ்பார்ம் டெண்டரில் 40 முதல் 45 நிறுவனங்கள் வரை பங்கேற்கின்றன. அவைகள் தங்களுக்குள் சிண்டிகேட் எனப்படும் ரகசிய கூட்டணி அமைத்து ஒரே விலை புள்ளியை வழங்குகிறது. அரசும் அந்த விலைக்கு வாங்குகிறது.

இந்த முறை பிற மாநிலங்களில் என்ன விலைக்கு உபகரணங்கள் வாங்க படுகின்றன என்பதை ஒப்பிட்டு பார்த்து வாங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தை கடைபிடிப்பதாக கூறும் நிலையில் என்ன விலைக்கு டிரான்ஸ்பார்ம் வாங்கப்படுகிறது என்பது இணையத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |