தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரே கட்டமாக தேர்தலை நடத்த திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திரிணாமுல், காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.