நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6,983 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,981-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,833-ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 984 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தார் எண்ணிக்கை 27,08,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,817 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.