Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை 8 வருடங்களுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில் 2020ஆம் வருடம் முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள். கூட்டமைப்பின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்த மனுவில், “2020 மற்றும் 2021ஆம் வருடங்களில் கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால் புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் “ஒவ்வொரு நாளும் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அம்சங்களுடன் வாகனங்கள் தயாரிக்கப்படுவதால், ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு அது தொடர்பாக கற்பிக்க வேண்டி இருப்பதால் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் முடியாத இலகுரக வாகனங்களும், 10 வருடங்கள் முடியாத கனரக வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு தகுதியானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த மனுவை தாக்கல் செய்து இருப்பதாகவும், அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், அப்போது கொரோனா இல்லாதபோது தற்போதைய சூழலை சாதகமாக்கி மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இவற்றில் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை எனவும் காலம் கடந்த வாகனங்களை பயிற்சிக்காக அல்லாமல் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனவும்” பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்தார்.

Categories

Tech |