அண்மை காலமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சிலகூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற 18 காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகையானது தற்போது 34 சதவீதம் ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் வருகிற ஜூலைமாத தவணைக்கான அகவிலைப்படியை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனிடையில் சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையில் சென்ற வாரத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்பின் தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) உயர்வை வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் “தமிழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் விதமாக அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்கள்இப்போது பெற்றுவரும் 31 சதவீத அகவிலைப்படி தொகையை 34 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.