தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமிழக வீரர்களுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசோக் சிகாமணி புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அணி ராஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஓய்வு பெற்ற வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.