Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓலா ஸ்கூட்டர் உற்பத்தி… 10 ஆயிரம் பேருக்கு வேலை… மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை விரைவில் அமைக்க உள்ளதால் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள 2400 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்யும். அதனால் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கும் ஓலா நிறுவனம் 10 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும்.

அதனால் தமிழகத்தில் வேலையில்லாமல் திண்டாடும் பெரும்பாலானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து அந்நிறுவனம் எப்போது உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Categories

Tech |