Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடல் அரிப்பைத் தடுக்க…. முதல்வர் அறிவித்த கலக்கலான திட்டம்….!!!

கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரங்களில் பனை மரம் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக நடந்த மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பருவநிலை மாற்றம் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.அப்போது பனை மரங்கள் கடலோரங்களில் நடுவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கடல் அரிப்பை தடுக்க பாறைகள் என ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை நடும் திட்டமானது மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் இனிமேல் பசுமை திட்டங்களுக்கான அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வரும் 2030 ஆம் வருடத்திற்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் இந்த திட்டம் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |