தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இவ்வாறு கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாடகூடாது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.