தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் அதிகரிக்காமல் இருப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
டெல்டா பிளஸ் ஆனது அதி வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். இந்த வைரஸானது நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும் தன்மை கொண்டது எனவே பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.