பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழக பாரம்பரிய முறைப்படி மடிசார் சேலை அணிந்தவாறு பெண் தனது தந்தையின் மடியில் அமர எதிர் முனையில் பைஜாமா அணிந்த டினா தாஸ் உறவினர் மடியில் அமர ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர் . சுபிக்ஷா, டீனா தாஸ் இருவரும் தங்களது திருமணத்தை கனடாவில் பதிவு செய்து கொண்டனர். வங்கதேசத்தை சேர்ந்த டீனா தாஸ் கனடாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது பெற்றோருடன் இருந்தபோது தனக்கு லெஸ்பியன் உணர்வுகளில் ஈடுபாடு உள்ளது என்பதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை ஒரு நோயாக கருதியைப் பெற்றோர் அவருக்கு ஒரு ஆணை திருமணம் செய்து வைக்க அந்த திருமணம் பந்தம் நான்கு ஆண்டுகளில் அறுந்து போனது. கல்கரி நகருக்கு வினோத ஜோடி சிறகடித்து பறப்பதற்கு முன்பு தெற்காசியாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல உள்ளது.