Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்…. நீதிமன்றம் பலே யோசனை….!!!!

கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரோ பேங்கில் ஆவின் பால் விற்பனை செய்ய முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்த போது,பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில்தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் பிளாஸ்டிக் உறைகளில் வரும் உணவுகளை சாப்பிடுகிறோம் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரோ பேங்கில் ஆவின் பால் விற்பனை செய்ய முடியுமா? தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .பிளாஸ்டிக் தடையை மறுவாழ்வு செய்யக் கூடிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம் தண்ணீர் பாட்டில்களில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |