தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.