Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களே கடலுக்கு போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது..

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளது.

தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |