நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதனால் நாளை முதல் மே 28-ஆம் தேதி வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது நாளை -நாளை மறுநாள் கனமழை பெய்யும் என குளிர்ச்சியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற ஆறாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் நாளையும் நாளை மறுநாளும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, தேனி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.