Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு 105 பேர், 286 கால்நடைகள் உயிரிழப்பு…. அமைச்சர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இதுவரை மழையில் சிக்கி 105 பேரும், 286 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் 54 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை காரணமாக இயல்பை விட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இரண்டு குழுக்கள், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தலா ஒரு குழுக்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1700 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மழை பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்தம் 105 பேர் உயிரிழந்ததாகவும், 286 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 1,814 குடிசைகள் மற்றும் 310 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், சென்னையில் 464 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், 86 இடங்களில் அகற்றப்பட்ட 378 இடங்களில் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |