Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?….. இதோ பாருங்க……!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு  50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |