Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை ALERT: பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை அளிக்கப்பட்டாலும் அதனை ஈடு செய்ய சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிகின்றது.

Categories

Tech |