Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில்… கன மழை பெய்யும் மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகும்.அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |