தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,38,583 கர்ப்பிணணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார்