Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலப்பு திருமணம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முன்னரே கணித்து முதல்வர் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முதல் முன்னுரிமை வழங்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இரண்டாவது, மூன்றாவது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |