Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டாயம் மொழி பாடமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கொண்டுவரப்படும். நான் முதல்வன் திட்டத்தின் படி எந்த படிப்பை படித்தாலும் மாணாக்கர்களுக்கு திறனாய்வு பயிற்சி கட்டாயம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |