Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமில்லை. கல்லூரியில் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேனீர் கப்புகள், டயர்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடையும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்ய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |