Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய 27 மாவட்டங்கள்…. இதோ லிஸ்ட்…. அதிர்ச்சி….!!!!

இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய உள்ளதாகவும், அதிக பின்தங்கிய மாவட்டங்களில் கொண்டிருக்கும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முதல் மூன்று இடத்திலும் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய 27 மாவட்டங்கள் என யுஜிசி குறிப்பிடுவது அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, கடலூர், காஞ்சி, குமரி, கரூர், மதுரை, நாகை, பெரம்பலூர், புதுகை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |