தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை,மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் நேர கட்டுப்பாடு விதித்தது.அதுமட்டுமல்லாமல் பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் சரவெடி களை தயாரிக்க மற்றும் வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. ஆனால் நேர கட்டுப்பாடு மற்றும் சரவெடி கட்டுப்பாடு ஆகியவற்றை யாரும் மதிக்கவில்லை.
தமிழக தலைநகரான சென்னையில் பட்டாசு புகை சூழ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது. அதனால் காற்று மாசின் அளவு 100 ஐ கடந்தது. குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிகபட்சமாக திருச்சியில் 321 குறியீடு என்ற அளவில் தற்போது வரை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக வேலூரில் 318, சேலத்தில் 275, திருப்பூரில் 233 என்கிற அளவிலும் தற்போது வரை காற்று மாசு பதிவாகியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் 45 என்ற மிகக் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் காற்று மாசுபாட்டின் அளவு:
மணலி – 344
நுங்கம்பாக்கம் -272
பொத்தேரி -151
அம்பத்தூர் – 150
சேலம் – 275
திருப்பூர் – 233
மதுரை -188
கோவை -178