தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்கும் இடைப்பருவ தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது.
அதன்படி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செப்.,22 முதல் 30-ந் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்.,1 முதல் 5-ந் தேதி வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது.