Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் மாற்றம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.அனைத்து தொடக்க மட்டும் நடுநிலை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனால் அரசு தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வு காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் ஆறாம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிக்கு வர வேண்டும். இதனை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |