Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி செய்தி…. அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அடுத்தடுத்து உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களைப் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |