நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து இன்று சற்று உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06-க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்தது ரூ.89.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்று 95 ரூபாயை தாண்டியுள்ளது.