தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தள்ளுவண்டியில் பழங்கள் மற்றும் காய்கள் விற்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாக ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது என தெரிவித்துள்ளது.