தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட காரணத்தால் வேலை நேரத்தை குறைக்க வேண்டுமென அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி வங்கி வேலை நேரத்தை நண்பகல் 12 மணி வரையிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை நேரத்தை காலை 9 முதல் 11 மணி வரையிலும் குறைக்கவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணி என 33% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.